பிறரைப் போல் நானும் ஒர் மனிதனாக எனது துயிலிடத்தின் மீது தூங்கிக்கொண்டிருந்தேன், சர்வ மகிமையாளரின் தென்றல் காற்று என் மீது படர்ந்து அதன் அறிவனைத்தையும் எனக்கு கற்றுத்தந்தது. இது என்னிலிருந்து வந்ததல்ல, மாறாக எல்லாம் வல்லவரும் எல்லாம் அறிந்தவரிடமிருந்து வந்தது….. அவரது எல்லா மறுக்கமுடியாத அழைப்பாணைகளும் என்னை அடைந்து அனைத்து மக்களிடையேயும் அவரது புகழை பற்றி என்னை பேசச்செய்தது.”


பஹாவுல்லா

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியான காலமானது மனிதகுல வாழ்வில் ஓர் புதிய எழுச்சிக்கான நேரமாக இருந்தது. ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் வட அமெரிக்கா ஆகியவை முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக அநீதியான அரசியல் மற்றும் சமூக முறைகளை தடுப்பதற்கு மக்கள் முன்னெழுந்தனர். இது செயல்படாமை மற்றும் அடிபணிதல் எனும் நீண்ட இருளிலிருந்த்து மனித விழிப்பிணர்வானது எழுச்சியுற்றது போல் இருந்தது.

நீதி, சமத்துவம் மற்றும் மனித இனத்தின் மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள சமூகத்தின் ஓர் புதிய அகநோக்கிற்கான ஏக்கம் எல்லா இடங்களிலும் இருந்தது. சிறந்த காலத்திற்கான உதயத்தின் உணர்வினை அந்நேர கவிஞர்களின் வார்த்தைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ரபீந்த்ரநாத் தாகூர் எழுதியது போல், “மனிதன் தனது ஆன்மாவினை எல்லா மனித இனத்தின் ஆன்மீக ஒற்றுமையில் கண்டறியக்கூடிய ஓர் புதிய யுகத்திற்கான உதயத்திற்கு தற்போதைய காலத்தின் ஒவ்வொரு தனி நபர்களுக்கும் தங்களையும் தங்களை சுற்றியுள்ளோர்களையும் தயார்படுத்திக் கொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது.”

அத்தகைய நேரத்தில், உலகத்தின் அநேகமானோர் அறிந்திராத, கடவுளின் புதிய செய்திக்கான சூரியன் ஈரானில் பஹாவுல்லா எனும் தோற்றத்தில் எழுந்துள்ளார், அவர் மனிதகுலத்தின் வருங்காலத்திற்கான கடவுளின் தூதராவார். பஹாவுல்லா கடவுள் ஒருவர் எனவும் எல்லா சமயங்களும் ஒரே கடவுளிடம் இருந்தே வந்தது எனவும் அதன் சாரம் உண்மையே எனவும் மனித இனத்தின் ஒருமைத்தன்மைக்கான நேரம் வந்துவிட்டது எனவும் போதித்தார்.

பஹாவுல்லாவின் வாழ்க்கையானது பிற சிறந்த சமயங்களின் நிறுவனர்களின் பூலோக வாழ்வினை தனித்துவப்படுத்தும் அதே சீர்சிறப்பான பண்புகளினால் குணவியல்புபடுத்தப்பட்டது. அவர் 1817 ல் ஈரானில் ஓர் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார், அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே பஹாவுல்லா அசாதாரணமான விவேகத்தை காண்பித்தார். இரக்கம், தாரளத்தன்மை மற்றும் நீதி ஆகிய அவரது பண்புகள் ஈடிணையற்றதாக இருந்தது. அவரது தந்தையின் மறைவிற்கு பின், அவருக்கு அரசவையில் ஓர் உயர்ந்த பதவி கிடைத்தது அவர் அதனை பணிவுடன் மறுத்து, ஒடுக்கப்பட்டவர்கள், நோயுற்றோர்கள் மற்றும் வறியவர்கள் ஆகியோருக்கு உதவுவதில் தனது நேரத்தை செலவிட விரும்பினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பஹாவுல்லா ஓர் புதிய சமயத்தின் தீர்க்கதரிசியாக தனது தூதுப்பணியினை பறைசாற்றியபோது அவரது போதனைகள் நவீனமயத்தின் அகநோக்கிற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அவரது மையக் கொள்கைக்கு — மனிதகுல ஒருமைப்பாட்டிற்கான நேரம் வந்துவிட்டது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்— சமூக போதனைகளான ஆண் பெண் சமத்துவம், அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையே இணக்கம், உண்மையை தேடுவதற்கான தனிமனித ஆய்வு, மதகுருமார்களை நீக்குதல், அனைத்து விதமான தப்பெண்ணங்களை ஒழித்தல் மற்றும் அனைத்துலக கல்வி ஆகியவை ஆதரவளித்தது.

அவரது போதனைகள் மதரீதியிலும் அரசியல் மரபுக் கோட்பாடு ரீதியிலும் ஓர் பெரும்புயல் போன்ற எதிர்ப்புகளால் அந்நேரத்தில் மாற்றத்திற்கு உடன்படாத வகையில் மிக கடுமையான புயலை தூண்டிவிட்டது. ஈரானின் ஷியா மதகுருமார்கள் தங்களோடு இரு மிகவும் வலிமையான அக்கால அரசுகளான- ஈரான் மற்றும் ஒட்டோமன் அரசர்களுடன்- சேர்ந்து அவரது செல்வாக்கினை தடுப்பதற்காக அவர்களது சக்திக்கு முடிந்த அனைத்தையும் செய்தனர். பஹாவுல்லா தனது அனைத்து செல்வங்களையும் இழந்தார், கொடுமைபடுத்தப்பட்டார், அடிக்கப்பட்டார், சங்கிலிகளால் சிறைபடுத்தப்பட்டார், நான்கு முறை நாடு விட்டு நாடாக ஒட்டோமன் சாம்ராஜ்ஜிய தண்டனைப்பகுதியில் (தற்போது இஸ்ரேலில் உள்ள அக்கா) 1892ல் அவரது விண்ணேற்றம் வரை நாடுகடத்தப்பட்டார்.

அவரது கடுமையான இன்னல்களின் போதும் பஹாவுல்லா தனது தூதுப்பணியினை தொடர்ந்து மனிதகுலத்தின் வழிகாட்டுதலுக்காக நூற்றுக்கும் அதிகமான தொகுப்புகளைக் கொண்ட புனித வாசகங்களை வெளிப்படுத்தினார். மனிதகுலம் முன்னெழும் என்ற மேன்மைத்தன்மையில் அசைக்கமுடியாத நம்பிக்கையுறுதியினை கொண்டிருந்தார் மற்றும் மனிதகுலம் தனது உண்மையிடத்தை அடைவதற்கு அனுமதிக்ககூடிய தன்மைமாற்றத்திற்கான விதைகளை தூவுவதில் அவரை எந்த அளவிலான வலியும் தியாகமும் தடுக்கவில்லை. பஹாவுல்லாவின் வாழ்நாட்களில், அவரது எதிரிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதும் அவரது செல்வாக்கு அதிகரித்தது. அவர் நாடு கடத்தப்படும் போதெல்லாம், அவரது அன்பு, சக்தி மற்றும் அவரது மேன்மையினாலும் ஆயிரக்கணக்கிலானோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டனர். இன்று அவரது சமயமானது உலகின் எல்லா முடுக்குகளிலும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான நம்பிக்கையாளர்களுடன் பரவியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கிலானோர் அவரது வாழ்க்கை மற்றும் வார்த்தைகளிலிருந்து ஓர் ஒன்றுபட்ட உலகினை உருவாக்குவதற்கு உணர்வூக்கத்தை அடைந்துள்ளனர்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மொழிபெயர்ப்பாளர் எட்வர்ட் க்ரான்வில் ப்ரௌவ்ன் பஹாவுல்லாவை குறுகிய நேரம் சந்தித்தார். அவர் இந்த குறிப்பினை வருங்காலத்திற்காக விட்டுச்சென்றுள்ளார்: “எவரது முகத்தை நான் உற்றுப் பார்த்தேனோ அதை நான் வருணிக்க முடியாது என்றாலும், அதனை நான் மறக்கவே முடியாது. துளைத்துச் செல்லும் அந்த கண்கள் ஒருவரது ஆன்மாவையே படிப்பது போல் இருந்தன; ஏராளமான அந்த கண் புருவத்தின் மீது சக்தியும் அதிகாரமும் அமர்ந்திருந்தன… நான் யாருடைய முன்னிலையில் நின்று கொண்டிருந்தேன் என கேட்கத் தேவையே இல்லை, மன்னர்கள் பொறாமைப்படும் அளவிற்கான பேரரசர்கள் வீணாக ஏங்கும் அளவிற்கு பக்தி மற்றும் அன்புக்கு உரியவரான அவரின் முன் நான் சிரம் தாழ்ந்து நின்றேன்.”

Exploring this topic:

The Life of Bahá’u’lláh

The Early Bahá’í Community

The Shrine of Bahá’u’lláh

Quotations

Articles and Resources