சலசலப்பான அண்டைபுரத்தின் தெருவொன்றில் ஒரு பெரிய குழுவாக குழந்தைகளின் குழு ஒன்று சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் நடந்து வருகின்றனர். வழியில் ஒரு காட்டு புதரில் இருந்து மஞ்சள் பூக்களை பறித்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு ஆன்மீக பண்புகளை கற்றுத்தரும் ஒரு இளம் தாய்மாரின் இல்லத்திற்கு அதனை கொண்டு வருகின்றனர். சத்தமாக ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அவர்கள் பாயை விரித்து அதன் நடுவே மலர்களால் அலங்கரித்து, பிரார்த்தனை கூற அமைதியாக தயாராகினர். பிறகு சத்தமாக, ஆர்வமான குரலில் ஒன்றாக பல பிரார்த்தனைகளை பாடினர், பிறகு ஆசிரியர் ஒரு புதிய பிரார்த்தனையை கற்றுக் கொள்ள அவர்களுக்கு உதவினார். பிறகு நம்பிக்கைக்கு பாத்திரமாயிருத்தல் சம்பந்தமாக ஒரு பாடலை பாடிய பிறகு புனித வாசகங்களில் இருந்து ஒரு மேற்கோளை கலந்துரையாடிய பிறகு, அந்த பண்பை எவ்வாறு கடைபிடிப்பது என்பது தொடர்பாக ஒரு கதையை கவனமாக கேட்டார்கள். பிறகு ஒரு துடிப்பான ஒத்துழைப்பு விளையாட்டை விளையாடிய பிறகு அவர்கள் கற்ற மேற்கோள் தொடர்பான ஒரு படத்தை தியான நிலையில் வண்ணமிட தயாராகினர்.

ஆசிரியர், ஆரம்பத்தில் வகுப்பை சீராக்குவதற்கு குழந்தைகளுக்கு உதவுவதில் சிரமப்பட்டாலும், பொருத்தமான நடத்தையை கடைபிடிப்பதற்காக மாணவர்களை உற்சாகப்படுத்த பழமையான கடின ஒழுக்கப்படுத்தும் முறை தேவையில்லை என்பதை கண்டறிந்தார்; மாறாக அங்கிருந்த சூழலில் அன்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை ஊடுருவி, மேலும் ஆன்மீக வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன என்பதை பற்றிய குழந்தைகளின் விழிப்புணர்வு ஆழமாகிறது. அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது, தங்களின் வரைபடங்களை தங்களின் குடும்பத்தோடு குழந்தைகள் பகிர்ந்துக் கொள்கின்றனர் மற்றும் ஒவ்வொரு காலையும் மாலையும் பிரார்த்தனை செய்யும் பழக்கத்தை கடைபிடிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று ஆசிரியரும் கேட்டுக் கொள்கிறார், மேலும் அவர்களின் இல்லங்களிலும் பக்தி கூட்டங்களை நடத்துகின்றனர்.

உள்ளூர் இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் சொந்த அண்டைபுரங்களில் குழந்தைகளுக்கான நன்னெறி மற்றும் ஆன்மீக கல்விக்கான வகுப்புகளின் ஆசிரியர்களாக சேவையாற்ற தங்களின் இல்லங்களை திறக்கையில், இது போன்ற ஆயிரக்கணக்கான காட்சிகள் ஒவ்வொரு வாரமும் இந்தியா நெடுக்கிலும் மடிப்பவிழ்ந்து வருகிறது. வகுப்புகளில், 'சரி' மற்றும் 'தவறு' என்பதில் கவனத்தை செலுத்துவதை காட்டிலும், ஒரு நபரின் ஆன்மீகத்தை செழுமையாகும் ஆன்மீக பண்புகள் மற்றும் நம்பிக்கைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தை மாதிரிகளை வளர்த்துக் கொள்வதின் மீது முக்கியத்துவம் செலுத்தப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே விழிப்புணர்வை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதனால் குழந்தைகள் கற்றுக்கொள்வதை மறுபலப்படுத்த ஒரு குறிப்பிட்ட கிராமம் அல்லது அண்டைபுரத்தின் அணைத்து சமூக உறுப்பினர்களும் ஒன்றாக பணிபுரிய முடியும்.