உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையை விட இனிமையான ஒன்று வேறெதுவுமில்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நிலை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்தனை என்பது இறைவனுடன் உரையாடுவதாகும். மிக உயர்ந்த நிலையை அடைவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவது தவிர வேறெதுவுமில்லை.


அப்துல் பஹா

இந்தியா நெடுக்கிலும் உள்ள கிராமங்கள் மற்றும் அண்டைபுரங்களில் கூட்டு வழிப்பாட்டிற்கான ஒன்றுகூடல்கள் வெளிப்பட்டு வருவதை காண முடிகின்றது. ஆயிரமாயிரமான ஆன்மாக்கள் தங்களின் இல்லங்களில் பலவித சூழலில் மாதாந்திர, வாராந்திர, அல்லது தினசரி பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்ளவும், புனித வாசகங்களில் இருந்து மேற்கோள்களை படிக்கவும், அவை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாத்பரியங்கள் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடவும் ஒன்று கூடுகின்றனர். பல்வேறு வயது மற்றும் பின்னணி கொண்ட நண்பர்களின் இந்த சிறிய ஒன்றுகூடல்கள் அதில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் ஆன்மீக வாழ்வை செழுமைப்படுத்தும் அதே வேளையில் ஒரு உள்ளூரில் ஒற்றுமை மற்றும் சமூகமெனும் ஆன்மீக பந்தங்களை பின்னி பிணைக்கிறது.

பஹாய் சமூகத்தில் அணைத்து பின்னணி சார்ந்த மக்களும் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக ஒன்றுகூடுவதற்காக கோவில்கள் இருந்தாலும் (டெல்லியில் உள்ள - தாமரை கோவில் என்றழைக்கப்படும், பஹாய் வழிபாட்டு இல்லம் ஒரு உதாரணம்), இறைவனை நினைவுகூற மக்கள் ஒன்றுகூடும் எந்த ஒரு இடமும் ஆசீர்வதிக்கப்பட்டதெனவும், கோவில் எனவும் பஹாய்கள் நம்புகிறார்கள். பஹாய் சமயத்தில் குருமார்கள் அல்லது பூசாரிகள் யாரும் இல்லாததால், ஒவ்வொரு தனிநபருக்கும் தனது சமூகத்தின் ஆன்மீக செழுமைக்கான முன்வீரராகும் பொறுப்பு உள்ளது, இந்த பொறுப்பை நிறைவேற்றும் ஒரு வழி தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக பக்தி கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகும்.