"பஹாவுல்லாவின் போதனைகளுள் மனிதகுல உலகின் முன்னேற்றத்திற்கான வழிகளில் ஒன்று பொருளாதார நாகரீகமாக இருந்தாலும், அது தெய்வீக நாகரீகத்துடன் இணைக்கப்பபடாத வரை, மனிதகுல மீட்சி என்ற விரும்பத்தக்க விளைவுகளை சாதிக்கவே இயலாது என்பதும் அடங்கும்..."


அப்துல் பஹா

புதியதோர் உலகிற்கான பஹாவுல்லாவின் தொலைநோக்கினால் உத்வேகமடைந்துள்ளோர், உலகம் முழுவதும், ஆன்மீகமாகவும் பொருளாதாரத்திலும் செழுமையான துடிப்புமிக்க சமூகங்களை கட்டமைக்கும் நடவடிக்கைகளிலும் செயல்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய சமூகங்களை உருவாக்க, அதன் கட்டுனர்களாக விளங்க போகும் தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறனாற்றல் மற்றும் முதிர்ச்சியை பெருமளவு முன்னேற்றத்தை தேவையாய் கொண்டிருக்கும். தற்போது, இந்தியா முழுவதுமுள்ள பஹாய் சமூகங்களில், வழிபாடு மற்றும் சேவை ஆகிய அச்சாணியாய் சுற்றி சுழன்று வரும் நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அத்தகைய திறனாற்றல்கள் பேணப்படுகின்றன.

மற்றவர்களுடன் பஹாய் போதனைகளிலிருந்து உட்பார்வைகளை பகிர்வதன் மூலம், கூட்டு வழிபாட்டிற்கான தளங்களை உருவாக்குவதன் மூலம், இளையவர்களுக்கு சக்தியளிப்பதன் மூலம், மற்றும் நண்பர்களின் குழுவிற்கு இறை வார்த்தைகளை படித்து அதனை உலகின் நலனிற்காக அமுல்படுத்த உதவுவதன் மூலம், வழிபாட்டு செயல்களும் பொதுநலனிற்கான முயற்சிகளும் ஒன்றாக பிணையப்பட்டுள்ள சமூகத்தை நிர்மாணிக்கும் செயல்முறைக்கு பங்கேற்பாளர்கள் பங்களிக்கக் கூடும்.

Scroll Up