"இறைவனின் சமயம் மற்றும் அவரது மதத்தை உயிர்ப்பூட்டும் அடிப்படை நோக்கம், மனித குலத்தின் நலன்களை பாதுகாப்பதும் மற்றும் ஒற்றுமையை பறைசாற்றுவதும், மற்றும் மனிதர்களுக்குள் அன்பு மற்றும் தோழமை உயிராற்றலை பேணுவதுமாகும்."

பஹாவுல்லா
 
உலகம் முழுவதும், நகரங்கள், கிராமங்கள் மற்றும் டவுன்களில், மில்லியன் கணக்கான பஹாய்கள் ஆன்மீகமாகவும் பொருளாதாரத்திலும் செழுமையான சமூகங்களை நிர்மாணிக்க முயன்று வருகின்றனர். சிறந்த உலகை நிர்மாணிக்க ஏங்குபவர்களுடன் கைகோர்த்து, வழிபாடு மற்றும் சேவையை மையமாக வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் புதிய நாகரீகத்தின் அடித்தளங்களை அமைக்க அவர்கள் உழைத்து வருகின்றனர். உலக சமயங்களில் இளைய சமயமான, பஹாய் சமயத்தை பின்பற்றுபவர்களுக்கு, இந்த முயற்சிகள் அனைத்தும் உலகளாவிய பெருமுயற்சியின் ஒரு பகுதியாகும், அதன் அனைத்தையும் தழுவிய நோக்கமானது மனித குலத்தின் ஆன்மீக மற்றும் பொருளாதார ஒன்றினைப்பேயாகும்.

பரந்த, பழமையான, பல்வகை இந்தியா கம்பீரமாக இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நடந்து சென்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதன் முன் புது தொடுவானங்கள் திறக்கிறது. இந்த எதிர்காலம் கொண்டு வரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள், ஒரு பலக்கிய, அதிகமாக இடைத்தொடர்புடைய உலகில் தழைப்பதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் புதிய அளவிலான ஆன்மீக முதிர்ச்சி மற்றும் அறிவார்ந்த திறனாற்றல்களின் புதிய நிலைகளை அடைய வேண்டியுள்ளது.

இந்திய பஹாய் சமூகம் நீதி மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு உலகை அமைக்க தேவைப்படும் ஆன்மீக உட்பார்வைகள் மற்றும் விஞ்ஞான தொலைப்பார்வை ஆகியவற்றை கொண்டு நாட்டின் மக்களை ஆயுதப்படுத்தும் திறனாற்றல் நிர்மாணிப்பு மற்றும் கற்றல் செயல்முறைகளுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.

2. சமயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது

வரலாற்று முழுவதும், இறைவன் தெய்வீக தூதர்களை கொண்டு மனித குலத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அதில் அண்மைய தூதர் பஹாவுல்லா ஆவார், அவர் நமது நவநாகரீக யுகத்திற்கான ஆன்மீக மற்றும் சமுதாய போதனைகளை கொண்டு வந்துள்ளார்.

மேலும் வாசிக்க...

மேலும் வாசிக்க

இந்தியா முழுவதும், அணைத்து பின்னணியிலிருந்து பல்வேறு சூழல்களில் இருந்தும் வரும் தனிநபர்கள் ஆன்மீக மற்றும் பொருளாதார செழுமை கொண்ட சமூகங்களிற்கான அடித்தளங்களை அமைத்து வருகின்றனர். வழிபாடு மற்றும் சேவை என்ற அச்சாணியை சுற்றி சுழலும் நடவடிக்கைகள் மூலம் பொதுநலனிற்காக அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...

House of Worship

பஹாய் வழிபாட்டு இல்லம் சமூக வாழ்வின் இரண்டு இடைத்தொடர்புடைய அம்சங்களான - வழிபாடு மற்றும் சேவை ஆகியவற்றை ஒன்று சேர்க்கிறது. வழிபாட்டு இல்லம் மதங்கள் ஒன்றென்பதை குறிப்பிட்டு இறைவனின் திருஅவதாரங்கள் அல்லது தூதர்களின் போதனைகள் அணைத்து ஒரே மெய்நிலையின் கதவுகள் என்ற சிந்தனையை பிரதிநிதிக்கின்றது.

மேலும் வாசிக்க...