"வழிபாட்டு இடமானது உலகின் அணைத்து சமயத்தை சார்ந்தவர்களுக்காக எழுப்பப்பட வேண்டும் என்று பஹாவுல்லா கட்டளையிட்டுள்ளார்; அதனால் அணைத்து மதங்களும், இனங்களும், பிரிவுகளும் ஒரே உலகளாவிய நிழலின் கீழ் ஒன்றிணையக்கூடும்; அதனால் அதன் புனிதமான திறந்த மன்றங்களிலிருந்து மனிதகுலத்தின் ஒற்றைத்தன்மை பறைசாற்றப்படும்."அப்துல் பஹா

பஹாய்களுக்கு, பக்தி வாழ்வானது, அதாவது பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக செலவழிக்கப்படும் நேரமானது சொந்த மனநிறைவிற்காக மட்டுமல்ல; அது தனிநபர் மற்றும் சமூகம் தங்களின் ஆன்மீக சக்திகளை சிறந்த உலகிற்கான செயல்களாக மாற்றுவதற்கு உற்சாகமளிக்கிறது.

வழிபாடு மற்றும் சேவை இரண்டிற்குமிடையே இருக்கும் தொடர்பு குறித்த தொலைநோக்கை கொண்டிருப்பதால், பிரார்த்தனைகள் செயல்களாக மாற்றமடைந்து, செயல்கள் ஆன்மீகத்தில் ஊறியிருக்கும். ஆன்மீக பாதையில் நடைமுறை சாத்திய கால்களுடன் நடப்பது சாத்தியமாகிறது. இந்தியா நெடுக்கிலுமுள்ள கிராமங்கள் மற்றும் அண்டைபுரங்களில் சமூக வாழ்வின் மாதிரி பின்னப்பட்டு வருகின்றது, அதில் வழிபாடும் சேவையும் நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.

புது தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம்,தாமரை கோவில் என்றழைக்கப்படும் இவ்விடம், பஹாய் வாழ்வின் இரண்டு அம்சங்களான - வழிபாடு மற்றும் சேவை இரண்டையும் ஒன்று கொண்டு வருகிறது. வழிபாட்டு இல்லத்தில் ஒரு மைய பிரார்த்தனை கூடம் உள்ளது, இதற்கு 9 நுழைவாயில்கள் உள்ளன, இது சமயங்களின் ஒருமைத்தன்மை மற்றும் இறைவனின் அவதாரங்கள் அல்லது தூதர்களின் போதனைகள் அனைத்தும் ஒரே மெய்நிலைக்கு இட்டு செல்லும் கதவுகள் என்பதை குறிப்பதாய் உள்ளன. கோவிலை சுற்றியிருக்கும் தோட்டங்கள் விருந்தாளிகளை பிரார்தனைகளுக்காக ஆன்மீகமாக தயார்படுத்துவதாய் உள்ளன. மக்களின் பொருளாதார மற்றும் கல்வியளிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மற்ற கட்டிடங்களும் கோவிலின் சுற்றுவட்டாரத்தில் உருவாக்குவதற்கான தொலைநோக்குமுள்ளது. கோவிலில் கூறப்படும் தொடர்ச்சியான பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் உருவாகும் உயிராற்றல் தில்லி -NCR மற்றும் அதனை தாண்டியும் உள்ள அண்டைபுரங்களிலும் அதிகரிக்கும் சமூக நிர்மாணிப்பு பணிகளில் ஊடுருவுகிறது.

 
Scroll Up