"நாகரீகம் மடிப்பவிழ்ந்துள்ளது. தேசங்கள் வளர்ந்துள்ளன.... விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்வுகள் அதிகரித்துள்ளன. இவையனைத்தும் உயிர்வாழ் இவ்வுலகம் தொடர்ந்து முன்னேறி வளர்ந்து வருவதை காண்பிக்கிறது; ஆகவே, நிச்சயமாக, அதேபோல, மனிதனின் முதிர்ச்சியை குணவியல்புப்படுத்தும் பண்புகளும் விரிவடைந்து வளரும்."



அப்துல் பஹா

மனிதகுலம் குழந்தைப்பருவ முதிர்ச்சியின்மையை கைவிட்டு முதிர்ச்சியின் விளிம்பை நோக்கி அணுகிக்கொண்டிருக்கும் நிலைமாற்ற காலத்தில் உள்ளது. உலகின் மற்ற பாகங்களை போல, இந்திய சமுதாயமும் இந்த காலத்தின் போது மாற்றங்களை சந்தித்து வருகிறது, முன்காலத்து முறைமைகள், கட்டமைப்புகள் மற்றும் மரபுகள் இன்றைய உலகின் பலக்கிய மெய்நிலைகளுக்கு தீர்வு கொடுக்க இயலவில்லை. இந்த நிலைமாற்ற செயல்முறைக்கு தனிநபர் மற்றும் சமுதாய அளவில் வழிகாட்டி, திசைகாட்டும் தார்மீக மறுசீரமைப்பிற்கான அழுகுரல் எங்கும் கேட்கிறது.

வரலாற்று பூர்வமாக, மனித இயல்பை நாகரீகப்படுத்தும் முதன்மை சக்தியாக மதம் இருந்து வருகிறது மற்றும் நன்னெறிக்கும் சட்டங்களுக்கும் அது அளித்த பங்களிப்புகள் சமுதாய நூலிழையை பாதுகாத்து வருகிறது. கிருஷ்ணர், புத்தர், சொராஸ்டர், மோசஸ், இயேசு கிறிஸ்து மற்றும் இறைத்தூதர் முகமது ஆகிய தெய்வீக தூதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு தேவைப்பட்ட ஆன்மீக மற்றும் நன்னெறி போதனைகளை வழங்கி நாகரீகத்தை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

தெய்வீக திருவெளிப்பாடெனும் முடிவில்லா செயல்முறையின் அண்மைய அத்தியாயம் தான் பஹாய் சமயம். பஹாய் சமயத்தின் நிறுவனரான இறை தூதர் பஹாவுல்லா, மானுடம் தனது கூட்டு பரிணாமத்தின் திருப்புமுனையில் உள்ளது என்றும் மானுடத்தின் ஒற்றுமையை அடைவதற்கு தேவையான சக்திகள் மற்றும் திறனாற்றல்கள் அதனிடம் உள்ளது எனவும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஒன்றிணைதலானது, மானுடத்தின் முதிர்ச்சிக்கான மணிமகுடமாக விளங்கி, தனிநபரின் வாழ்வு, சமூகம் மற்றும் சமுதாயத்தின் கட்டமைப்புகள் ஆகியவற்றின் பரிபூரண சீரமைப்பினை உள்ளடக்கியிருக்கும்.

இந்த நிலைமாற்ற காலத்தில் பஹாய் சமயத்தின் நோக்கம், நாம் மனிதகுல ஒருமையெனும் இலக்கை நோக்கி முன்னேறுகையில் தனிநபரின் உள்ளூர வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் கட்டமைப்புகள் ஆகியவற்றின் உயிரியிலான தன்மைமாற்றத்தினை தூண்டி, பராமரித்து, வழிநடத்துவதேயாகும்.