“இந்த புனித அவதாரங்கள் உலகின் வசந்தகாலத்தின் வருகையை போன்றவர்கள். ஒவ்வொரு வசந்தகாலமும் ஒரு புதிய படைப்பின் நேரமாகும்...”அப்துல் பஹா

பஹாய் சமயமானது பாப் மற்றும் பஹாவுல்லா என்ற இரு தெய்வீகத் தூதுவர்களிடம் கடவுளினால் ஒப்படைக்கப்பட்ட தூதுப்பணியுடன் துவக்கமானது. இந்நாளில் அவர்கள் நிறுவிய சமயத்தின் தனித்தன்மைமிக்க ஒற்றுமையானது பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்கு பின் வழிகாட்டுதலின் தொடர்ச்சியினை உறுதிசெய்ய அவரால் கொடுக்கப்பட்ட தெளிவான வழிமுறைகளினால் ஆணையிடப்பட்டுள்ளது. பின்னுரிமைக்கான வரிசையானது ஒப்பந்தம் என்ற வகையில் குறிப்பிடப்பட்டு , பஹாவுல்லாவிடமிருந்து அவரது மகனான அப்துல் பஹாவிற்கும், பின்பு அப்துல் பஹாவிடமிருந்து அவரது பேரன் ஷோகி எஃபெண்டிக்கும், பஹாவுல்லாவினால் உருவாக்கப்பட்ட உலக நீதி மன்றத்திற்கும் சென்றது. ஒரு பஹாய் பாப் மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் தெய்வீக அதிகாரத்தையும் மற்றும் இத்தகைய நியமிக்கப்பட்ட பின்னுரிமையாளர்களையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

பாப்
பாப் பஹாய் சமயத்தின் முன்னறிவிப்பாளர் ஆவார். 19ம் நூற்றாண்டின் மத்தியில், மனிதகுலத்தின் ஆன்மீக வாழ்வினை மாற்றுவதற்கென விதிக்கப்பட்ட செய்தியை தாங்கி வந்திருப்பவர் தாமே என அவர் அறிவித்தார். அவரது தூதுப்பணியானது, அவரைவிட சிறந்தவரான, அமைதி மற்றும் நீதிக்கான ஓர் பருவத்தினை வழிநடத்தக்கூடிய, கடவுளிடமிருந்து வரவுள்ள இரண்டாவது தூதுவருக்கான வழியினை தாயர்படுத்துவதே.

பஹாவுல்லா
பஹாவுல்லா- “கடவுளின் ஜோதி”- பாப் அவர்களாலும் கடந்த எல்லா தெய்வீக தூதுவர்களாலும் முன்னறிவிக்கப்பட்ட வாக்களிக்கப்பட்டர் ஆவார். பஹாவுல்லா ஓர் புதிய நாகரீகத்தை கடவுளிடமிருந்து மனித குலத்திற்கு வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான வாசகங்கள், கடிதங்கள் மற்றும் புத்தகங்கள் அவரது எழுதுகோலில் இருந்து வந்துள்ளது. அவரது புனித எழுத்துக்களில், அவர் மனித வாழ்வின் ஆன்மீக மற்றும் லௌகீக பரிமாணங்கள் இரண்டையும் கருத்தில் கொண்ட ஓர் உலகளாவிய நாகரீகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பினை வடிவமைத்துள்ளார். இதற்காக, 40 வருட கால சிறைவாசம், துன்புறுத்துதல்கள் மற்றும் நாடு கடத்தலை அவர் அனுபவித்தார்.

அப்துல் பஹா
பஹாவுல்லா தனது உயிலில் தனது மூத்த மகனான அப்துல் பஹாவினை தனது போதனைகளுக்கான அதிகாரப்பூர்வ விளக்கவுரையாளராகவும் மற்றும் சமயத்தின் தலைமையாகவும் நியமித்தார். கிழக்கு மற்றும் மேற்கு முழுவதும் அமைதிக்கான தூதுவராகவும், ஓர் மிகச்சிறந்த மனிதராகவும், புதிய சமயத்தின் தலைசிறந்த அறிவுரையாளராகவும் அப்துல் பஹா விளங்கினார்.

ஷோகி எஃபெண்டி
அப்துல் பஹா தனது மூத்த பேரனான ஷோகி எஃபெண்டியை பஹாய் சமயத்தின் பாதுகாவலராக நியமித்தார், வளர்ச்சியை முறையாக பேணுதல், புரிந்துணர்வினை ஆழப்படுத்துதல் மற்றும் பஹாய் சமூகமானது முழு மனித குலத்தின் பல்வகைத் தன்மையினை பிரதிபலிப்பதற்காக அதிக அளவில் வளர்ந்துவரும் போது அதன் ஒற்றுமையை வலுப்படுத்துதல், போன்றதனை 36 ஆண்டுகள் ஷோகி எஃபெண்டி மேற்கொண்டார்.

உலக நீதி மன்றம்
இன்று உலகெங்கும் பஹாய் சமயத்தின் மேம்பாட்டை உலக நீதி மன்றத்தால் வழிகாட்டப்படுகிறது. அவரது சட்டங்களை கொண்ட நூலில், பஹாவுல்லா உலக நீதி மன்றத்தை மனிதகுல மேம்பாட்டிலும், கல்வி, அமைதி மற்றும் உலகளாவிய செழுமையை வளர்ப்பதிலும், மனித கவுரவம் மற்றும் சமயத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஒரு ஆக்கப்பூர்வ தாக்கத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Scroll Up