“இளமைக்காலமானது, வலிமை மற்றும் வீரியம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்படுவதோடு அது மனித வாழ்வில் மிகச் சிறந்த காலமாகத் தனித்து விளங்குகின்றது. ஆகவே, நீங்கள் இரவும் பகலும் கடும் முயற்சி செய்ய வேண்டும். அதனால், விண்ணுலக வலிமை வழங்கப்பட்டு, சிறந்த நோக்கங்களால் தூண்டப்பட்டு, அவரது வானுலக சக்தி மற்றும் விண்ணுலகக் கருணை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றால் உதவப்படுவீர்கள்…..“



அப்துல்-பஹா

பஹாய் சமூகமானது, இளைய பருவத்தை ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஒரு விசேட காலமாக அங்கீகரிக்கிறது, இது மனித வாழ்க்கையின் வசந்த காலமாகக் கருதப் பட வேண்டியதாகும். இந்த கால கட்டத்தில் இளைஞர்களின் வளர்ந்து வரும் அறிவுசார், ஆன்மீக மற்றும் உடல் திறன்கள் சமூக மாற்றத்தை நோக்கி செலுத்தப்பட்டால் சமூகங்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய இருவருமே தமது உண்மையான திறனை உணர முடியும். இளைய இளைஞர்களாக இருக்கும் வருடங்களில் அவர்களுக்கு ஒரு முன்னேற்பாடு தேவைப்படுகிறது, இது இளைஞர்கள் 11 லிருந்து 14 வயதுக்குட்பட்ட ஒரு விரைவான மாற்றத்தின் காலமாகும். இந்த கால கட்டத்தில் தான் இளைய இளைஞர்கள் குழந்தைப் பருவத்தை விடுத்து முதிர்ச்சியை நோக்கி முன்னேறுகிறார்கள். ‘இளைய இளைஞர்கள்‘என்றழைக்கப்படும் இந்த இளம் பருவ வயதினர் வாழ்க்கையின் இந்த கட்டத்தின் போது பல புதிய கேள்விகளையும், அபிலாஷைகளையும் கொண்டிருக்கின்றனர். இந்த வயதினர் பெரும்பாலும் பிரச்சினைக்குரியவர்களாகக் கருதப்பட்டு மேலும் எதிர்மறையான குறிப்புகளால் விவரிக்கப்படுகையில், இந்த இளைய இளைஞர்களுக்கான திட்டமானது இந்த வயதினரின் உள்ளார்ந்த பொதுநலன் பேணும் தன்மை, பிரபஞ்சம் குறித்த கற்றலுக்கான ஆர்வம், ஒரு வலுவான நீதியுணர்வு மற்றம் உலக மேம்பாட்டிற்காக உழைப்பதற்கான ஆர்வம் ஆகியவை குறித்த புரிந்துணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் நிறைந்த இக்கால கட்டத்தை கடப்பதற்கு உதவுவதற்காக அவர்களின் ஆன்மீக சக்தியூட்டலுக்காக ஒரு செயல்முறை திட்டம் உலகளாவிய முறையில் பஹாய் சமூகத்தினால் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான இளைஞர்கள் தங்கள் சொந்த வட்டாரங்களில் இளைய இளைஞர்களின் சிறிய குழுக்களுடன் உடன் செல்லும் உயிர்ப்பூட்டுபவராக சேவை புரிய பயிற்சியளிக்கப்படுகிறார்கள். தங்கள் உயிர்ப்பூட்டுபவரின் உதவியுடன், இந்த இளைய இளைஞர்கள் தங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் ஆழமான கேள்விகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அவர்கள் ஆன்மீக ஞானம் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான தார்மீகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் உதவும் உபகரணங்களை படிக்கின்றனர். அந்த உபகரணங்கள் அவர்களின் சொல்லாற்றலை நேர்மறையான முறையில் வளர்ப்பதற்கும், அவர்களது அபரிமிதமான சக்திகளை தங்கள் சமூகங்களுக்கு சேவைகளாக மடைமாற்றம் செய்ய அவர்களுக்கு உதவுகின்றன. சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான மற்றும் அழிவுகரமான சக்திகள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கு உதவும் மெய்நிலை குறித்த ஆய்வில் இத்திட்டம் அவர்களை ஈடுபடுத்துகிறது. அது நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுடன் தம்மை இணைத்துக் கொள்ளும்போது, மேன்மை மிக்கவர்கள் எனும் தமது உண்மை அடையாளத்தைக் கொள்ளையடிக்கும் சக்திகளை எதிர்க்க அவர்களுக்கு உதவுகிறது. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைய இளைஞர்கள் இத்தகைய குழுக்களில் உயிர்ப்பூட்டுபவர்களாக சேவை செய்ய முன்வந்துள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உதவியுடன் பங்கேற்கிற்கின்றனர்.