ஓர் ஒன்றுபட்ட உலகினை உருவாக்குவது என்ற அவரது திருவெளிப்பாட்டின் நோக்கத்தை உறுதிசெய்வதற்கும்—பஹாய் சமயத்தின் ஒற்றுமையை பாதுபாப்பதற்கும்—பஹாவுல்லா தனது மூத்த மகனான, அப்துல் பஹாவினை, தனது ஒப்பந்ததின் மையமாக நியமித்தார் மற்றும் உலக நீதி மன்றத்தை ஸ்தாபிப்பதையும் வடிவமைத்திருந்தார். அதன் பின், அப்துல்பஹா உலக நீதி மன்றத்தின் செயல்பாடுகளுக்கான கொள்கைகளை உருவாக்கினார் மற்றும் அவரது மறைவிற்கு பின், தனது மூத்த பேரனான, பஹாய் சமயத்தின் பாதுவாலர் என பெயரிடப்பட்ட, ஷோகி எஃபெண்டியின்பால் பஹாய்கள் திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலக நீதி மன்றமும் பாதுகாவலரும் கொள்கைகளை செயல்படுத்துதல், சட்டங்களை பிறப்பித்தல், நிறுவனங்களை பாதுகாத்தல் மற்றும் ஓர் என்றும் முன்னேறிவரும் தேவைகளுக்காக பஹாய் சமயத்தை தழுவுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.
36 ஆண்டுகள், ஷோகி எஃபெண்டி அசாதாரணமான முன்னெச்சரிக்கை, விவேகம் மற்றும் பக்தியுடன் வளர்ச்சியை முறையாக பேணுதல், புரிந்துணர்வினை ஆழப்படுத்துதல் மற்றும் பஹாய் சமூகமானது முழு மனித குலத்தின் பல்வகைத் தன்மையினை பிரதிபலிப்பதற்காக அதிக அளவில் வளர்ந்துவரும் போது அதன் ஒற்றுமையை வலுப்படுத்துதல் போன்றதனை மேற்கொண்டார்.
ஷோகி எஃபெண்டியின் வழிகாட்டுதலின் கீழ் பஹாவுல்லாவால் வடிவமைக்கப்பட்ட தனித்தன்மையான அமைப்பினை உலகம் முழுவதும் அதிவிரைவாக முன்னேறிவரும் சமூக விவகாரங்ள் நிர்வகிக்கப்பட்டது. அவர் பஹாய் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார், புனித நிலத்தில் சமயத்தின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையத்தை உருவாக்கினார் மற்றும் பல ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் எழுதி, நாகரீகத்தின் ஆன்மீக பரிமாணத்திற்கும் சமூக மாற்றத்தின் இயக்கத்திற்குமான, மனிதகுலம் நகர்ந்துவரும் எதிர்காலத்தை நோக்கிய ஓர் போற்றுதற்குரிய உணர்வெழுச்சியினை உருவாக்குவதற்குமான ஆழ்ந்த அகப்பார்வைகளை வழங்கினார்.
Exploring this topic:
- The Life and Work of Shoghi Effendi
- Guidance and Translations
- Shoghi Effendi’s Passing
- Quotations
- Articles and Resources