உலக நீதி மன்றம் பஹாய் சமயத்தின் சர்வதேச நிர்வாக பேரவையாகும். இந்த நிறுவனத்தின் உருவாக்கத்தை பஹாவுல்லா தனது சட்டங்களின் தொகுப்பான கிதாப்-இ-அஃதாஸ் நூலில் ஆணையிட்டுள்ளார்.
உலக நீதி மன்றம் ஒன்பது உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அணைத்து தேசிய பஹாய் சபைகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். உலக நீதி மன்றத்தை மனிதகுல மேம்பாட்டிலும், கல்வி, அமைதி மற்றும் உலகளாவிய செழுமையை வளர்ப்பதிலும், மனித கவுரவம் மற்றும் சமயத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஒரு ஆக்கப்பூர்வ தாக்கத்தை செலுத்துவதற்கான தெய்வீக அதிகாரத்தை பஹாவுல்லா அந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். பரிணமித்து வரும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றார் போல பஹாய் போதனைகளை அமுல்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் சமயத்தின் புனித திருவாசகங்களில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத விவகாரங்களை பற்றி சட்டமேற்றும் சக்தி அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
1963 ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டத்திலிருந்து, உலக நீதி மன்றம் உலக பஹாய் சமூகத்தை வழிநடத்தி செழுமையான உலகளாவிய நாகரீகத்தின் கட்டுமானத்தில் பங்கெடுக்கும் அதன் திறனாற்றலை வளர்த்து வந்துள்ளனர். உலக நீதி மன்றம் வழங்கி வரும் வழிகாட்டுதல்கள் பஹாவுல்லாவின் உலக அமைதிக்கான தொலைநோக்கை மெய்நிலைப்படுத்த கற்றுக் கொண்டிருக்கும் பஹாய் சமூகத்தின் எண்ணங்கள் மற்றும் செயல்களில் ஒற்றுமையை நிச்சயிக்கின்றன.
Exploring this topic:
- A Unique Institution
- Development of the Bahá’í Community Since 1963
- The Seat of the Universal House of Justice
- Quotations
- Articles and Resources